“ஷேன் வார்ன் மரணத்திற்கு எடை குறைப்பு முயற்சி ஒரு காரணமா?” என்று, புதிய சர்ச்சை ஒன்று வெடித்து கிளம்பி இருக்கிறது.

உலக கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் மகத்தான லெக் ஸ்பின்னராக தனியொரு முத்திரை பதித்தவ தனித்துவமாக நின்றவர் ஷேன் வார்ன்.

ஷேன் வார்ன், ஆஸ்திரேலிய அணிக்காக கிட்டதட்ட 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்து, அந்த சாதயைில் அவர் 2 வது இடமும் பிடித்திருக்கிறார்.

அதுவும் உலக கிரிக்கெட் அரங்கில், தனது மாயாஜலமான சுழற்பந்து வீச்சால், ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்த சரித்திர நாயகனாகவும் அவர் வலம் வந்த நிலையில், தனது ஓய்வுக்குப் பிறகு ஷேன் வார்ன் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வந்தார்.

இந்த சூழலில் தான்,  52 வயதான கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான ஷேன் வார்னே, தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென்று உயிரிழந்தார். 

தாய்லாந்தின் கோஹ் சாமுய் தீவில் தனக்கு சொந்தமான சொகுசு மாளிகையில் ஷேன் வார்னே தங்கியிருந்த நிலையில், நேற்று திடீரென்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என்றும், கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், ஷேன் வார்னின் கடைசி டிவிட்டர் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பான அவரது கடைசி டிவிட்டர் பதிவில், “ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்திற்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில் ராட் மார் காலமான என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தான் உத்வேக். ராட் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ரோட் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியிருந்தார்.

இப்படியாக, ஷேன் வார்ன் இந்த டிவீட்டை பதிவு செய்த அடுத்த 12 மணி நேரத்தில், அவரே உயிரிழந்து உள்ளார்.

இந்த நிலையில், ஷேன் வார்ன் மரணத்தில் தற்போது புதிய சர்ச்சை வெடித்துக் கிளம்பி உள்ளது.

அதாவது, ஷேன் வார்ன் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று தனது டிவிட்டரில் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், மிக சிறப்பான உடற்கட்டுடனும் உள்ள தனது பழைய புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அத்துடன், சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அந்த உடற்கட்டமைப்பை குறிப்பிட்டு, “ஜூலை மாதத்திற்குள் உடல் எடையை குறைத்து இதே நிலைமைக்கு திரும்பப்போகிறேன். அதற்கான முயற்சியை தொடங்கியுள்ளேன்” என்றும், அவர் தெரிவித்திருந்தார்.

இப்படியான, பொதுவாக பிரபலங்கள் அல்லது சினிமா உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்களது உடல் எடையை உடனடியாக குறைப்பதற்காக ஸ்டெராய்டுகள் பயன்படுத்துவது, பல்வேறு மருந்துகள், சிகிச்சை முறைகளை பின்பற்றுவது, குறுகிய காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. 

அந்த வகையில், “உடனடியாக உடல் எடையை குறைக்க ஷேன் வார்ன் மேற்கொண்ட எதோனும் முயற்சியே அவரது உயிரை பறித்திருக்கலாம்” என்கிற, ஒரு சர்ச்சை தற்போது வெடித்துக் கிளம்பி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, அவரது மரணத்திற்கு 4 நாட்களுக்கு முன்பு, ஷேன் வார்ன் தான் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறி, ஒரு பதிவையும் அவர் பதிவிட்டு உள்ளார். 

அந்த டிவீட்டர் பதிவு, தற்போது சமூகவலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.