தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் இணைந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் தீயவர் குலைகள் நடுங்க. அறிமுக இயக்குனர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் தீயவர் குலைகள் நடுங்க படத்தை ஜி எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகர் விஷாலின் தந்தை G.K.ரெட்டி, அபிராமி, வெங்கடாச்சலம், பிரவீன் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள தீயவர் குலைகள் நடுங்க படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்ய, பரத் ஆசீவகன் இசை அமைத்துள்ளார். தீயவர் குலைகள் நடுங்க படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள தீயவர் குலைகள் நடுங்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…