இளம் பெண்ணை காதலித்து விட்டு, அந்த பெண்ணின் தந்தையை கரம் பிடித்த காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கருமுட்டைகளை வழங்கி அந்த காதலி குழந்தையும் பெற்றெடுத்துள்ள சம்பவம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

“நமது வாழ்க்கையில் சில விசித்திரமான சம்பவங்களைப் பார்க்கும் போது, அல்லது நம்பே முடியாத சில சம்பங்களைப்ப் பார்க்கும் போது, நாம் நம்மையே மறந்து பார்ப்பது உண்டு. அப்படி நடைபெறும் சில விசயங்களுக்கு நாம் நமக்குள்ளேயே அது தொடர்பான கருத்துக்களை எண்ண ஓட்டங்களில் ஓடச் செய்வது உண்டு. சில சம்பங்களை நாம் கிண்டலாக சினிமா ஸ்டைலில் “என்னடா நடக்குது இங்க?!”, “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?” என்றும் கேட்பதுண்டு. அப்படியான ஒரு சம்பவம் தான், உலகையே திரும்பிப்பார்க்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் அரங்கேறி உள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணான சாஃப்ரான், அங்குள்ள கல்லூரியில் படித்துக்கொண்டு வருகிறார். இந்த இளம் பெண்ணின் தந்தை பேரி என்பவர் ஆவார்.

இளம் பெண் சாஃப்ரான், பல மாதங்களுக்கு முன்பாக ஸ்காட் என்பரை காதலித்து வந்தார் என்றும், கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலர்களாக அங்குள்ள பல பகுதிகளுக்கும் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததுடன், தங்களது காதலையும் அவர்கள் வளர்த்து வந்துள்ளனர்.

ஆனால், ஒரு கட்டத்திற்குப் பிறகு, அவர்களுக்குள் லேசான கருத்து வேறுபாடுகள் வந்ததால், அவர்கள் இருவரும் தங்கள் காதலை முறித்து கொண்டு நண்பர்களாக மட்டும் இருந்து வந்து உள்ளனர். 

அதன் பின்னர், 21 வயதான இளம் பெண் சாஃப்ரான், அவரது தந்தை பேரி, மற்றும் அந்த இளம் பெண்ணின் முன்னாள் காதலன் ஸ்காட் மூவரும் விடுமுறையைக் கொண்டாட வெளியூர் சென்று இருக்கிறார்கள்.

அப்போது, இளம் பெண் சாப்ரானின் தந்தையான பேரி, ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரிய வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, சாஃப்ரானுடனான காதலை முறித்துக் கொண்ட இளைஞர் ஸ்காட், தனது காதலியின் தந்தையான பேரியை காதலிக்கத் தொடங்கி உள்ளார். 

அந்த விடுமுறை கொண்டாட்டத்தின் போது, சாஃப்ரானின் தந்தையான பேரியும், சாஃப்ரானின் முன்னாள் காதலரான ஸ்காட்டும் திருமண நிச்சயம் செய்து கொண்டனர்.

இதில், அவர்கள் இருவருமே ஆண்கள் என்பதால், இயற்கையாகக் குழந்தை பெற வாய்ப்பில்லை. இதனை கவனத்தில் கொண்ட இளம் சாஃப்ரான், தன்னுடைய கருமுட்டைகளை அந்த தம்பதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார். அதாவது தனது தந்தைக்கும், தனது முன்னாள் காதலனுக்கும், தனது கருமுட்டைகளை வழங்க முன் வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, உடல்கள் ஒன்று சேராமல் மருத்துவ தொழில் நுட்ப உதவியுடன், 21 வயதான இளம் பெண் சாஃப்ரான் கர்ப்பம் அடைந்தார். 

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஓரினச்சேர்க்கை தம்பதியின் முதல் குழந்தையை அந்த இளம் சாஃப்ரான் பெற்று எடுத்துள்ளார். 

தான் குழந்தை பெற்றெடுத்தது குறித்து இளம் பெண் சாஃப்ரான் கூறும்போது, “எனது தந்தைக்கும், எனது முன்னாள் காதலனுக்கும் மீண்டும் ஒரு குழந்தை வேண்டும் என்றால் கூட, நான் அவர்களுக்கு எனது கருமுட்டையை வழங்கத் தயாராக இருக்கிறேன்” என்றும், மகிழ்ச்சியோடு கூறி உள்ளார். இந்த செய்தி, தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு, பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.