பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலிஃபாவுக்கு இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பி உள்ள வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

உடலில் டாட்டூ குத்திக்கொள்ளும் வழக்கம், தற்போது உலக அளவில் பிரபலமாகவே இருந்து வருகிறது.

ஒருவர் மீது தாம் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக, அவரது பெயரையோ அல்லது அவரது முதல் எழுத்தையோ பலரும் தங்களது உடலில் பச்சை குத்திக்கொண்டு வருகின்றனர்.

எனினும், மாறிவரும் டிஜிட்டல் கலாச்சாரத்திற்கு ஏற்ப, இந்த பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் நாளடைவில் மாறி, உடலில் ஒருவரது முகத்தையே படமாக டாட்டூவாக வரையும் விதம் அறிமுகமாகி, கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான், ஆபாச படங்களில் நடித்து மகவும் புகழ் பெற்ற மியா கலிஃபா வின் முகத்தை, இந்திய இளைஞர் ஒருவர் தனது உடலில் கால் பாகத்தில், டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

தனது காலில் குத்தப்பட்ட  மியா கலிஃபா வின் முகத்தை, அந்த இளைஞர் வீடியோவாகவும் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதாவது. ஆபாசப்பட உலகில் கொடிகட்டிப் பறந்த மியா கலிஃபாவுக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. 

இந்த நிலையில் தான், தனது காலில் குத்தப்பட்ட மியா கலிஃபா வின் முகத்தை, அந்த இளைஞர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராவில் பதிவு செய்துள்ளது, பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடீயோவை, மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் தற்போது பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த வீடியோ மியா கலிஃபாவின் பார்வைக்கும் தற்போது வந்து உள்ளது. இந்த வீடியோவை பார்த்த மியா கலிஃபா, தன்னுடைய கடும்  அதிருப்தியை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். 

அவர் பதிவு செய்துள்ள கருத்தில், “இது, மிகவும் பயங்கரமானது” என்று கூறி, தன்னுடைய கடுமையான அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும், “இந்த டாட்டூ விவகாரம் வைரலாகி டாட்டூ போட்ட  இளைஞருக்கும், இதனை வரைந்த கலைஞருக்கும் ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் தற்போது குவியத் தொடங்கி உள்ளனர். 

இதே போல், கடந்த 2018 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் மியா கலிஃபா முகத்தை, தனது உடலில் டாட்டூவாக குத்திக்கொண்டார். 

அப்போதே, அவர் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அப்போதே அவர் பதிவு செய்துள்ள கருத்தில், “நான் இதனை விரும்புவதில்லை” என்று, அவர் அப்போதே கூறியுள்ளார். 

அத்துடன், “எனது முகத்தை அல்லது பெயரை டாட்டுவாக குத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்றும், இது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியது இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டு இருந்தார்.

முக்கியமாக, “ஒருவரின் முகத்தை வேறொருவரின் உடலில் வரைவது என்பது சரியானதல்ல” என்றும்,  மியா கலிஃபா விளக்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.