ரஷ்யா உக்ரைனில் போர் நடத்திய நிலையில் அங்கு இந்திய தேசிய கொடியை பார்த்ததும் உக்ரைன், ரஷியா ராணுவ வீரர்கள்  என்னை ஒன்றும் செய்யவில்லை என கர்நாடக மாணவர் தெரிவித்தார்.

ukraine war

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 7-வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. 

மேலும் இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன.  இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.  

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வந்த நிலையில் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 

உக்ரைனில் சிக்கி இருந்த தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்த முகமது ஹபீப் அலி பாதுகாப்பாக கர்நாடகம் திரும்பி இருந்தார். அவர் தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரமடைந்ததும், மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உள்பட பல மாணவர்கள் தங்கி இருந்தோம். அப்போது அந்த விடுதியில் இந்திய தேசிய கொடியை பறக்க விட்டு இருந்தேன். இதற்கு அனுமதி அளித்திருந்தனர். இந்திய தேசிய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன். ஏனெனில் இந்திய தேசிய கொடியை பார்த்ததும் உக்ரைன், ரஷியா ராணுவ வீரர்கள் என்னை ஒன்றும் செய்யவில்லை. உரிய பாதுகாப்பு கொடுத்தனர்.

மேலும் தேசிய கொடியை பயன்படுத்த இந்தியாவை தவிர மற்ற நாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் பிற நாட்டு மாணவர்கள் உக்ரைனில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். உக்ரைனில் சிக்கி இருக்கும் என்னை போன்ற பிற மாணவர்களும் பத்திரமாக இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.