“உலகின் பெரும் கோடிஸ்வரர் பில்கேட்ஸ் விவகாரத்தின் பின்னணி கதை“ பற்றிய செய்திகள் தீயாய் பரவி வருகிறது. அது என்ன காரணம் என்பதனை தற்போது பார்க்கலாம்..

உலகின் மிகப்பெரிய பணக்காரர் 65 வயதான பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனராக இருந்து வருகிறார். இவரது மனைவி 56 வயதான மெலிண்டா கேட்ஸ் இருக்கிறார். இந்த தம்பதிக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு, ரோரி ஜான் கேட்ஸ், ஜெனிபர் கேதரின் கேட்ஸ், போப் அடில் கேட்ஸ் என மொத்தம் 3 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த ஆண்டு நிலவரப்படி பில்கேட்ஸ் சொத்து மதிப்பு ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக இருக்கிறது. 

இப்படியாக பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியரின் கடந்த 27 ஆண்டு காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இப்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் குடும்பத்தில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, 27 ஆண்டு கால அவர்களது திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு, அது தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. 

அத்துடன், பில்கேட்ஸ் - மெலிண்டா கேட்ஸ் தம்பதியரின் கடந்த வாரம் விவாகரத்தின் பின்னணி என்ன என்பதை கூறும் விதமாக டிவிட்டரில் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். 

அதில், “எங்கள் உறவைப்பற்றிய ஒரு மிகப்பெரிய சிந்தனை மற்றும் நிறைய வேலைகளுக்குப் பின்னர் நாங்கள் எங்கள் திருமணத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்ற முடிவை எடுத்துள்ளோம் என்றும், கடந்த 27 ஆண்டுகளில், வியக்கத்தக்க 3 குழந்தைகளை வளர்த்து இருக்கிறோம்” என்றும், அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

“எல்லா மக்களும் ஆரோக்கியமானதொரு வாழ்க்கை வாழ்வதற்கு உலகமெங்கும் செயல்படும் ஒரு அறக்கட்டளை நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும், அந்தப்பணியில் நாங்கள் தொடர்ந்து நம்பிக்கை கொண்டு, சேர்ந்து பணியாற்றுவோம் என்றும், ஆனால் எங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒரு தம்பதியராக இனி நாங்கள் ஒன்றாக வளர முடியும் என்று நம்பவில்லை” என்றும், தெரிவித்து உள்ளனர். 

“இந்த புதிய வாழ்க்கையை நாங்கள் தொடங்கும் வேளையில், எங்கள் குடும்பத்துக்கான இடத்தையும் அந்தரங்க உரிமையையும் நாங்கள் நாடுகிறோம்” என்றும், அவர்கள் கூட்டாகி விளக்கம் அளித்திருந்தனர். 

இந்தநிலையில், “பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், மிக நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பதாக” அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

“பில்கேட்ஸ் உடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் 66 வயதான ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில்” ஈடுபட்டு வந்திருக்கிறார். 

“இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறை தண்டனையை அவர் பெற்றார். அத்துடன், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், நெட்வொர்க் ஒன்றையும் நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் சிறையில் உயிரிழந்தார்” என்று கூறப்படுகிறது.

அதாவது, “பாலியல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற, மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டெய்னுடன் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பில் கேட்ஸ் தொடர்பில் இருந்து வந்தார் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

முக்கியமாக, “நியூயார்க் நகரில் ஜெப்ரிக்கு சொந்தமான வீட்டில், பலமுறை அவரை சந்தித்துப் பேசுவதை பில் கேட்ஸ் வழக்கமாக வைத்திருந்தார் என்றும், இந்த நட்பில் மிலிண்டா கேட்சுக்கு அதிருப்தி இருந்தது என்றும், இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது” என்றும், அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன. 

மேலும், “விவகாரத்து குறித்து பில் கேட்ஸ் - மிலிண்டா இடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்றும், தங்கள் மண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக, கடந்த 2019 ஆம் ஆண்டே, தன் வழக்கறிஞரிடம் மிலிண்டா தெரிவித்துள்ளார்” என்றும், அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து உள்ளன.

இதனிடையே, “உலக பணக்காரர்களின் வரிசையில் தற்போது 4 ஆம் இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ், தனது 56 வயதான மனைவி மிலிண்டா கேட்ஸை விவகாரத்து செய்யும் போது, அவர்கள் இருவரும் சொத்துக்களை எப்படி பிரித்துக் கொண்டனர் என்பதில் தான் பொது மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.