ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்தது நீதானே எந்தன் பொன்வசந்தம்.வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.ஜெய் ஆகாஷ் இந்த தொடரின் நாயகனாக நடித்தார்.

தர்ஷனா அசோகன் இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வந்தார்.டாக்டர் ஆக இருக்கும் இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங்கில் இறங்கி பின்னர் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் தர்ஷனா அசோகன்.

இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது,இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.500 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.