தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் இசையமைப்பாளர் தமன்.S தொடர்ந்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் பல மெகா ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இந்த 2022ஆம் ஆண்டும் தமன்.S இசையில் அடுத்தடுத்து மாஸ்ஸான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

முன்னதாக மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேகாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள பீம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, பிரபாஸின் ராதே ஷ்யாம் (பின்னணி இசை), மோகன்லாலின் லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் மற்றும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த வரும் RC15 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

மேலும் தளபதி விஜய் நடிக்கும் தளபதி66 மற்றும் சிவகார்த்திகேயனின் SK20 ஆகிய படங்களுக்கும் தமன்.s இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் தமன்.S தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், 

அனைவருக்கும் வணக்கம், 
தேவையான அனைத்து பாதுகாப்போடும், இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட போதும், லேசான அறிகுறிகளோடு எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளோடு என்னை தனிமை படுத்திக்கொண்டேன். எனவே என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அனைவரும் கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள். 
உங்கள் ஆதரவுக்கு நன்றி… 

என தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S விரைவில் மீண்டு வர கலாட்டா குழுமம் சார்பாக வேண்டிக் கொள்கிறோம்.
 

thaman,s.thaman,music director thaman,music composer thaman,music composer thaman s tested positive for corona,corona,coronavirus,covid19