இந்திய சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்டானா ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் அதிக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அந்தவகையில் பிக்பாஸின் மற்றொரு அங்கமாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் ULTIMATE நிகழ்ச்சி சமீபத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் தொகுத்து வழங்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. அதேபோல் தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க பிக் பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அஜய் குமார், அகில் சர்தக், பிந்துமாதவி, ஹமீதா கட்டூன், மகேஷ் விட்டா, முமைத்கான், தேஜாஸ்வி, ஸ்ரீ ரபாகா, அரியானா குளோரி, சிவா, ஆர்ஜே சைத்து, அணில் ரத்தோட், மித்ரா ஷர்மா, பாபா பாஸ்கர், நடராஜ் மாஸ்டர், சரயு ராய், ஐஷு ரெட்டி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நான்ஸ்டாப் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகை பிந்துமாதவி வெற்றி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற பிந்து மாதவிக்கு சமூகவலைதளங்களில் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிந்துமாதவி பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இதோ..