'அண்ணா வரார் வழிவிடு!'- தளபதி விஜயின் துள்ளலான டான்ஸில் செம்ம வெயிட்டாக வந்த லியோ பட "நா ரெடி" பாடல் இதோ!

தளபதி விஜய் பிறந்தநாளில் முதல் பாடலான நா ரெடி பாடல்,thalapathy vijay birthday treat leo movie first single naa ready out now | Galatta

ஒட்டுமொத்த திரையுலகமும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் லியோ திரைப்படத்தின் முதல் பாடல் தளபதி விஜய்யின் பிறந்த நாளான இன்று ஜூன் 22ஆம் தேதி வெளிவந்துள்ளது. முன்னதாக தளபதி விஜயின் முதல் பிறந்த நாள் பரிசாக லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12மணிக்கு வெளியானது. நட்சத்திர நாயகராகவும் பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகராகவும் விளங்கும் தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மக்களின் நாயகரான தளபதி விஜய் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மாநகரம் , கைதி என தன் பாணியில் அடுத்தடுத்த அதிரடியான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறை மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து மெகா ஹிட் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய நிலையில், மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. குறிப்பாக கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் இருந்து உருவான LCU என்ற யுனிவர்சில் தளபதி விஜயின் லியோ படமும் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகிறது. முன்னதாக லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த லியோ படத்தின் முதல் பாடலான “நா ரெடி” எனும் பாடல் இன்று தளபதி விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையில் தளபதி விஜய் அனிருத் மற்றும் அசல் கோளார் இணைந்து பாடி இருக்கும் இந்த நா ரெடி பாடல் தற்போது இணையதளத்தை அதிர வைத்திருக்கிறது. தளபதி விஜயின் ஸ்டைலான நடனத்தோடு வந்திருக்கும் இந்த பாடலும் கட்டாயம் ட்ரெண்டிங் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தளபதி விஜயின் பக்கா மாஸான நடனத்தில் வந்த லியோ படத்தின் நா ரெடி பாடல் இதோ…
 

ஜெயம் TO பொன்னியின் செல்வன் 2... ஜெயம் ரவியின் அட்டகாசமான 20வருட திரைப்பயணம்... எமோஷனலான அறிக்கை இதோ!
சினிமா

ஜெயம் TO பொன்னியின் செல்வன் 2... ஜெயம் ரவியின் அட்டகாசமான 20வருட திரைப்பயணம்... எமோஷனலான அறிக்கை இதோ!

தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!- வேற லெவல் சம்பவம் இருக்கு… லியோ பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!- வேற லெவல் சம்பவம் இருக்கு… லியோ பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

'என் சுவர்களும் முகமூடிகளும் தூசுகளாக நொறுங்கின..!'- சீயான் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பை முடித்த பார்வதியின் வைரலாகும் பதிவு உள்ளே!
சினிமா

'என் சுவர்களும் முகமூடிகளும் தூசுகளாக நொறுங்கின..!'- சீயான் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பை முடித்த பார்வதியின் வைரலாகும் பதிவு உள்ளே!