தளபதி விஜய்க்கு அன்பைப் பொழிந்த நட்சத்திரங்கள்... பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்களின் பட்டியல் இதோ!

தளபதி விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த பிரபலங்கள்,celebrities birthday wishes to thalapathy vijay lokesh kanagaraj | Galatta

மக்களின் மனம் கவர்ந்த நாயகராக திகழும் தளபதி விஜய் இன்று ஜூன் 22ம் தேதி தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாள் பரிசாக தளபதி விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படத்திலிருந்து மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணி அளவில் வெளியான நிலையில் அடுத்த சர்ப்ரைஸ் மாலை 6.30மணியளவில் வெளிவர இருக்கிறது. ஆம் தளபதி விஜய் தனது சொந்த குரலில் பாடி இருக்கும் லியோ திரைப்படத்தின் முதல் பாடல் நான் ரெடி எனும் அதிரடியான பாடல் இன்னும் சற்று நேரத்தில் ரிலீஸாக இருக்கிறது. பிறந்தநாள் கொண்டாடும் தளபதி விஜய் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திரை உலகை சார்ந்த பல முன்னணி நட்சத்திரங்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தளபதி விஜயின் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா! மீண்டும் உங்களோடு இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்." என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.

#LeoFirstLook is here! Happy Birthday @actorvijay anna!
Elated to join hands with you again na! Have a blast! 🤜🤛❤️#HBDThalapathyVIJAY #Leo 🔥🧊 pic.twitter.com/wvsWAHbGb7

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 21, 2023

முன்னதாக தளபதி விஜய் அவர்களை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனர் அட்லீ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, லியோ என குறிப்பிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். 

 

View this post on Instagram

A post shared by Atlee (@atlee47)

அதேபோல் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தின் இயக்குனர் வம்சி பைடபல்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பான விஜய் சார் எப்போதும் அனைத்திலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்” என பதிவிட்டு இருக்கிறார். 

Happiest Birthday dear @actorvijay Sir... Wishing You the Best of everything always...🤗 ❤️ #HBDThаlаpаthyVIJAY pic.twitter.com/Mk5XMXfWYA

— Vamshi Paidipally (@directorvamshi) June 22, 2023

தற்சமயம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்துவரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சஞ்சய் தத் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயோடு லியோ படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் விஜய்க்கு லியோ படத்தின் ரிலீஸ் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த வருடம் முழுக்க வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைய வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார். 

Wishing a very happy birthday to brother @actorvijay! Looking forward to Leo's release, wishing you a year filled with success and happiness! pic.twitter.com/ENb1AoJL0P

— Sanjay Dutt (@duttsanjay) June 22, 2023

தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி விஜயின் லியோ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை குறிப்பிட்டு ஹாப்பி பர்த்டே அண்ணா என குறிப்பிட்டு இருக்கிறார். ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து “ஹாப்பி பர்த்டே அன்பான தளபதி விஜய் சார்” என வாழ்த்த, 

Happy bday na!!!❤️❤️❤️ https://t.co/QJrVG28Ygs

— venkat prabhu (@vp_offl) June 21, 2023

தளபதி 68 படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கடவுளின் ஆசிர்வாதங்கள் உங்களுக்கு” எனக் குறிப்பிட்டு தளபதி விஜயோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். 

.@itsyuvan wishes #ThalapathyVijay on his birthday 🥳@actorvijay @Dir_Lokesh @trishtrashers @Jagadishbliss@7screenstudio @anirudhofficial #ThalapathyVijay #Yuvan #HBDThalapathyVijay #Thalapathy #Vijay #LEOFirstLook #HappyBirthdayThalapathyVijay #Leo #BloodySweet #Thalapathy68pic.twitter.com/5PfZUP2PIx

— Galatta Media (@galattadotcom) June 22, 2023

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் தளபதி விஜயின் புகைப்படத்தை பகிர்ந்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பான விஜய்” என தனது வாழ்த்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
 

Happy Birthday Dear Vijay@actorvijay pic.twitter.com/flVcxOzFJE

— Mohanlal (@Mohanlal) June 22, 2023

தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!- வேற லெவல் சம்பவம் இருக்கு… லியோ பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

தளபதி விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம்!- வேற லெவல் சம்பவம் இருக்கு… லியோ பட மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

'என் சுவர்களும் முகமூடிகளும் தூசுகளாக நொறுங்கின..!'- சீயான் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பை முடித்த பார்வதியின் வைரலாகும் பதிவு உள்ளே!
சினிமா

'என் சுவர்களும் முகமூடிகளும் தூசுகளாக நொறுங்கின..!'- சீயான் விக்ரமின் தங்கலான் படப்பிடிப்பை முடித்த பார்வதியின் வைரலாகும் பதிவு உள்ளே!

'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே
சினிமா

'ஸ்டன்ட்ஸ் பலவீனமானவர்களுக்கானது அல்ல!'- ஷூட்டிங்கில் காயமடைந்த மாநாடு பட நாயகி கல்யாணி பிரியதர்ஷன்! புகைப்படங்கள் உள்ளே