சன் டிவியில் தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் சீரியல் நடிகையாக பிரபலமானவர் அர்ச்சனா.தொகுப்பாளராக கவனம் ஈர்த்த அர்ச்சனா விஜய் டிவியின் ராஜா ராணி சீசன் 2 தொடரில் நடித்து நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.

சித்து மற்றும் ரியா விஸ்வநாதன் இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் அர்ச்சனா.இவர் நடித்த கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

இவருக்கென தனியொரு ரசிகர் பட்டாளம் உருவானது.தற்போது இவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி வந்தது.இதுகுறித்து கலாட்டா சார்பில் அவரை தொடர்புகொண்டபோது சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவர் உறுதிசெய்தார்.

இவர் விலகியது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அர்ச்சனா மிக சிறப்பாக அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததால் அவருக்கு பதிலாக அடுத்து யார் நடிக்க போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.இவர் விரைவில் ஒரு புது சீரியலில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.