விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

ஐந்து சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.பிக்பாஸை தொடர்ந்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஹிட் அடித்தது.

தற்போது ஆறாவது சீசன் குறித்த முதல் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளார்.ஐந்து சீசன்களில் ஏதேனும் ஒரு துறையில் பிரபலமான ஒருவரை தேர்ந்தெடுத்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பார்கள்.விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீசனில் பொதுமக்களும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு ப்ரோமோவில் கடந்த சீசன் டைட்டில் வின்னர் ராஜு தோன்றி பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த பல ரசிகர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயற்சி எடுத்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்