பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் கர்ணன். ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். 

படம் வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்தாலும், இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று, ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. வழக்கம் போல தனது அசத்தலான நடிப்பால் மிரட்டியுள்ளார் தனுஷ். சமீபத்தில் நடிகர் தனுஷுக்கு அசுரன் படத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி பதிவு செய்துள்ளார் நம் சின்ன கலைவாணர் விவேக். படிக்காதவன் திரைப்படத்தில் வரும் காமெடி காட்சியை வைத்து அவர் பாராட்டியுள்ளார். எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே..எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ ? கர்ணன் பட குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் விவேக் மற்றும் தனுஷ் இருவருமே பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் முதன் முறையாக 2009 -ல் வெளியான படிக்காதவன் படத்தில் தான் இணைந்து நடித்தனர். அந்த படத்தில் இவர்கள் காம்போ வெற்றிபெற அதன் பின்னர் உத்தமபுத்திரன், சீடன், மாப்பிள்ளை, வேலையில்லா பட்டதாரி, என்று பல்வேறு படங்களில் இவர்களின் நகைச்சுவை கெமிஸ்ட்ரி ஒர்க் ஆனது. 

திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்திலும் நடித்துள்ளார் விவேக்.