அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார்.

இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. இதனைத்தொடர்ந்து மீண்டும் எஃப்.ஐ.ஆர் படத்தின் பணிகளுக்கு திரும்பவுள்ளதாக சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தார். 

சமீபத்தில் எஃப்.ஐ.ஆர் பட டப்பிங் பணிகள் ஆரம்பமானது. முறையான பாதுகாப்புடன் இந்த டப்பிங் பணிகள் நடந்தது. படமாக்கப்பட்ட காட்சிகள் வரை தனது டப்பிங்கை நிறைவு செய்தார் விஷ்ணு. லாக்டவுனுக்கு முன்பு எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகளும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் லாக்டவுனுக்கு பிறகு FIR படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இயக்குனர் கவுரவ் படத்தில் போலீஸ் ரோலில் நடிக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் கவுரவ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இரவு நேர ஷூட்டிங் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஷ்ணு பகிரும் புகைப்படம் ரசிகர்களின் ஆவலை தூண்டுகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் காடன். ராணா முதன்மை கேரக்டரில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது. காடன் திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் நாளன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார்.