இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு கொடுத்தார் ரஜினி.  எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லை என்றால் எப்போதும் இல்லை. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தேன். ஆனால் கொரோனாவால் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. 


டிசம்பரில் 31-ல் கட்சி தொடங்க தேதி அறிவித்து ஜனவரியில் கட்சி தொடங்குவேன் . கொடுத்த வாக்கிலிருந்து என்றும் தவற மாட்டேன். இப்போ இல்லன்னா எப்போதும் இல்லை. தமிழக மக்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. எனவே இந்த நேரத்தில் என்னை வாழ வச்ச தமிழக மக்களுக்கு என்னால் முடிந்ததை செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். எல்லாத்துக்கும் தலைஎழுத்து இருக்கிறது. தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றுவோம் என இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். உடனே #இப்போ_இல்லை_என்றால்_எப்போது_இல்லை என்ற ஹேஷ்டாக் சமூக வலைதளங்களில் டிரெண்டாக தொடங்கியது. 


இந்நிலையில் பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

பாஜக உறுப்பினருக்கு தனது கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுப்பதால், ” ரஜினிக்கு பின் பாஜக இருக்கிறது . ஆன்மீக அரசியல் என்பது பாஜகவின் மத அரசியல் தான். ரஜினி ஆட்சிக்கு வந்தால் பாஜக தான் ரஜினியை வழிநடத்தும். கமல் மற்றும் சீமானின் வாக்கு எண்ணிக்கை பிரிந்து சில சதவீதம் ரஜினிக்கு செல்லுமா  ” என்று சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பி இருக்கிறது. 
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினியின் இந்த அறிவிப்பானது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திருக்கிறது.