நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் F.I.R.  இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் இணைந்து நடித்துள்ள F.I.R. படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய சைக்கோ த்ரில்லர் திரைப்படமான ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்த சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவருகிறது மோகன்தாஸ். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும்  பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் முரளி கார்த்திக் எழுதி இயக்கியுள்ள மோகன்தாஸ் படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய சுந்தரமூர்த்தி.K.S. இசையமைத்துள்ளார்.விஷ்ணு விஷாலின் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மோகன்தாஸ் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. நடிகர் ஆர்யா இந்த போஸ்டரை வெளியிட்டார். சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ள மோகன்தாஸ் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.