சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இந்தமுறையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை நமிதா மாரிமுத்து மற்றும் நாடியா ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 16 போட்டியாளர்களுடன்  பரபரப்பாக நகர்கிறது.

இந்தவாரக் கேப்டனாக சிபி தேர்வு செய்யப்பட்ட நிலையில் நாமினேஷனில் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். தொடர்ந்து நேற்று (அக்டோபர் 19) பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது.

நாணயத்தை கைப்பற்றி டாஸ்க்கில் வெற்றிபெறும் போட்டியாளர் இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தால் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ளமுடியும். ஒருவேளை நாமினேட் செய்யப்படாத போட்டியாளர் அவருக்குப் பிடித்த ஒருவரை காப்பாற்றிக்கொள்ள முடியும். நேற்று தொடங்கிய இந்த டாஸ்க் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்றைய (அக்டோபர் 20) நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோவில் ராஜூவும் இமான் அண்ணாச்சியும் பிரியங்கா மற்றும் அபிஷேக் ராஜாவிடம் பேசுகிறார்கள். அப்போது இமான் அண்ணாச்சி, அபிஷேக்கைப் பார்த்து, "இது ரொம்ப கேவலமான எண்ணம்" என பேசும் ப்ரோமோ வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ...