தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜுன். தென்னிந்திய அளவில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடைசியாக நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த அல வைகுண்டபுரம்லு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனை அடுத்து அல்லு அர்ஜுனின் அடுத்த திரைப்படமாக வெளிவருகிறது புஷ்பா.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து தயாரித்துள்ள புஷ்பா திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கியுள்ளார். மிரோஸ்லா கூபா ப்ரோஸெக் ஒளிப்பதிவு செய்ய கார்த்திகா ஸ்ரீநிவாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லனாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, தனன்ஜெய், சுனில், ஹரிஷ் உத்தமன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக வெளியான புஷ்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அல்லு அர்ஜுன் & ஃபகத் பாசில் ஆகியோரது போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.