"அண்ணன் நான் எறங்கி வரவா!"- தளபதி விஜயின் லியோ பட 'நா ரெடி' பாடலின் பக்கா மாஸ் ப்ரோமோ இதோ!

தளபதி விஜயின் லியோ பட நா ரெடி பாடல் ப்ரோமோ வெளியானது,thalapathy vijay in leo movie naa ready song promo video anirudh | Galatta

தளபதி விஜய் அவர்களின் திரை பயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடலின் ப்ரோமோ வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய பிளாக் பஸ்டராக வெற்றி பெற்றதும், கைதி - விக்ரம் படங்கள் இருக்கும் LCUம் லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளன.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் லியோ திரைப்படம் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கி மார்ச் இறுதி வரை தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக தளபதி விஜய்யின் பிறந்த நாளான வரும் ஜெயம் 22ஆம் தேதி லியோ திரைப்படத்தின் பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக படக்குழு அறிவித்த நிலையில், சமீபத்தில் நா ரெடி எனும் முதல் பாடல் வெளிவர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டனர். இந்தப் பாடலை விக்ரம் திரைப்படத்தில் போர் கண்ட சிங்கம் பாடலை எழுதிய விஷ்ணு எடவன் எழுதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி விஜய் ரசிகர்களை இன்னும் உற்சாகப்படுத்தும் வகையில் லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடலின் புது ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் தற்போது சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர். "நான் ரெடி தான் வரவா அண்ணன் நான் எறங்கி வரவா" தளபதி விஜய் குரலில் வெளிவந்திருக்கும் இந்த ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.தளபதி விஜயுடன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ரேப் பாடகர் அசல் கோளார் இணைந்து இப்பாடலை பாடியிருக்கின்றனர். செம்ம மாஸாக வந்த தளபதி விஜயின் நா ரெடி ப்ரோமோ இதோ…
 

முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு கொடுத்த புது சர்ப்ரைஸ்... அதிதி ஷங்கரின் துள்ளனான நடனத்தில் வந்த வைரல் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு கொடுத்த புது சர்ப்ரைஸ்... அதிதி ஷங்கரின் துள்ளனான நடனத்தில் வந்த வைரல் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்துடன் கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான மாஸ் அப்டேட் இதோ!