சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கைகோர்த்த முன்னணி நிறுவனம்... ரிலீஸ் குறித்த அதிரடியான லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய ஐங்கரன்,rajinikanth jailer overseas rights bagged by ayngaran international | Galatta

இந்த 2023 ஆம் ஆண்டில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்றான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அடுத்ததாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். தனது திரை பயணத்தில் 170வது திரைப்படமாக நடிக்கும் #தலைவர்170 திரைப்படத்தை நடிகர் சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்து உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனது 171 வது திரைப்படமாக உருவாக்கும் புதிய படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொயதீன் பாய் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சிறப்பு கௌரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரது வழக்கமான டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

We are super excited to associate once again with @sunpictures for the Super 🌟's #Jailer 🔥

Overseas release by @Ayngaran_offl #JailerFromAugust10@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan pic.twitter.com/y29Vnak2pi

— Ayngaran International (@Ayngaran_offl) June 20, 2023

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… செம்ம அப்டேட் கொடுத்த பார்வதி! வைரலாகும் புது GLIMPSE இதோ
சினிமா

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… செம்ம அப்டேட் கொடுத்த பார்வதி! வைரலாகும் புது GLIMPSE இதோ

முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு கொடுத்த புது சர்ப்ரைஸ்... அதிதி ஷங்கரின் துள்ளனான நடனத்தில் வந்த வைரல் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழு கொடுத்த புது சர்ப்ரைஸ்... அதிதி ஷங்கரின் துள்ளனான நடனத்தில் வந்த வைரல் வீடியோ இதோ!