விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று கனா காணும் காலங்கள்.சீரியல் பார்ப்பவர்களை தவிர அனைவரையும் கவரும் வண்ணம் இந்த தொடர் இருந்தது.90ஸ் கிட்ஸின் பெரிய Favourite தொடர்களில் இதுவும் ஒன்றாக இன்றும் இருக்கிறது.இந்த தொடரை இன்றும் மறுஒளிபரப்பு செய்யச்சொல்லி பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

முதல் சீசனில் பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பான இந்த தொடர் வயது வித்தியசமின்றி அனைவரையும் கவர்ந்திருந்தது.பள்ளி வாழ்க்கையில் நடக்கும் ரகளைகள் போன்றவற்றை வைத்து இளைஞர்களை கவரும் வண்ணம் இந்த தொடர் உருவாக்கப்பட்டது.
இந்த தொடரின் பெரிய வரவேற்பை தொடர்ந்து கல்லூரி கதையாகவும் விஜய் டிவி இதனை தொடர்ந்து எடுத்தனர்.கல்லூரி கதைக்களத்தில் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பப்பட்டது இந்த தொடர்.இந்த தொடரில் நடித்த நட்சத்திரங்கள் பலரும் சின்னத்திரையிலும்,வெள்ளித்திரையிலும் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். தற்போது கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இந்த தொடரின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகவுள்ளது.இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த தொடரின் ஒளிபரப்பு குறித்த அறிவிப்பு ப்ரோமோ உள்ளிட்டவை அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialexpress)