தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் முன்னதாக இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து ஹிட்டான ராட்சசன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தயாராகி வரும் மோகன்தாஸ் திரைப்படமும் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வருகிறது.

மோகன்தாஸ் படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அடுத்ததாக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் F.I.R.

F.I.R திரைப்படம் தமிழ் & தெலுங்கில், அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரியில் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.விஷ்ணு விஷாலின் VV ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள F.I.R படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா 2022-ல் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “2022 மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது… எனது திரைப்படங்கள் வெளிவருவதால் மட்டுமல்ல… எனது அன்பான தம்பி ருத்ரா திரையுலகில் அறிமுகம் ஆவதால்... அவரது முதல் படத்திற்கான ஸ்கிரிப்ட்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களில் யாரிடமாவது நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் எங்களை அணுகலாம்” என பதிவிட்டுள்ளார்.