இந்திய  திரையுலகின் பிரமாண்ட இயக்குனரான, இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில்  அடுத்த பிரம்மாண்டமாக வெளிவரும் RRR திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து மொழிகளில், அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 7 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரித்துள்ள RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. KK.செந்தில்குமார் ஒளிப்பதிவில் தயாராகும் RRR படத்திற்கு இசை அமைப்பாளர் M.M.கீரவாணி இசை அமைத்துள்ளார்.

RRR படத்தில் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிக்க, அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் RRR திரைப்படத்திலிருந்து ஜூனியர் என்டிஆரின் புதிய  மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அனல் பறக்கும் ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் அதிரடியான இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RRR Movie (@rrrmovie)