தமிழ் தொலைக்காட்சிகளில் தங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்று , முன்னணி சேனல்களில் ஒன்றாக இருப்பது விஜய் டிவி.தங்கள் வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளனர்.

பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் ஒளிபரப்பி TRP-யிலும் அசத்தி வருகின்றனர் விஜய் டிவி.விஜய் டிவியின் வித்தியாசமான நிகழ்ச்சிகளில் லைவாக இருப்பதற்காக பாடல்கள்.கவுண்டர்கள் என போட்டு அந்த நிகழ்ச்சியை சிறப்பாக கொண்டுசெல்வது DJ-கள் தான்.

அப்படி இந்த DJ-க்கள் கைவண்ணத்தில் சூப்பர் சிங்கர்,குக் வித் கோமாளி,ஜோடி நம்பர் 1,ஸ்டார்ட் மியூசிக் என பல வெற்றி நிகழ்ச்சிகளில் ஒரு பங்காக இருந்து வருகின்றனர்.விஜய் டிவியின் முக்கிய DJ-க்களாக இருந்து வருபவர்கள் DJ பிளாக் மற்றும் DJ கெளதம்.

இதில் ஒருவரான DJ கெளதம் என்பவருக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.இவருக்கும் ரோஷினி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது,இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.