சதுரங்கவேட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் பெற்ற இயக்குனர் H.வினோத் அடுத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் திரை உலகில் பலரது பாராட்டுகளையும் பெற்றது. இதனையடுத்து அஜீத் குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்ற H.வினோத் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பின்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜீத் குமாருடன் இணைந்த H.வினோத் இயக்கத்தில் தயாரானது வலிமை திரைப்படம். அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கும் #AK61 திரைப்படத்தையும் இயக்கவுள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத் குமாருடன் இணைந்து ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, செல்வா, விஜய் டிவி புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள வலிமை படத்தில் மிரட்டலான வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திக் நடித்துள்ளார். போனி கபூரின் பே பியூ பிராஜக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் வலிமை திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பிரபல ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்புராயன் ஸ்டன்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் வலிமை திரைப்படத்தில் அஜித்குமார் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் . வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள வலிமை படத்தின் அதிரடியான புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.