தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட்டான தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி. குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஐந்து சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இதனை அடுத்து 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் சமீபத்தில் நடைபெற்று வெற்றி பெற்றது.

முன்னதாக கடந்த ஆண்டு(2021) அதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசனின் போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடிகர் நகுல் நடுவர்களாக இருந்தனர். BB ஜோடிகள் வெற்றியை தொடர்ந்து தற்போது BB ஜோடிகள் சீசன் 2 ஆரம்பமாகியுள்ளது.

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் ஜோடிகளாக, இசைவாணி-வேல்முருகன், ஐக்கி பெர்ரி-தேவ், VJ அபிஷேக்-சுருதி,  பாவனி-அமீர், ஆர்த்தி-கணேஷ், சுஜா வருணி-சிவகுமார், தாமரை-பார்த்தசாரதி, டேனி ஆகியோர் போட்டியாளராக கலந்து கொள்கின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியை ராஜு ஜெயமோகன் மற்றும் பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்க உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் வருகிற மே 8 முதல் ஆரம்பமாகும் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் கலக்கலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது அந்த புரோமோ வீடியோ இதோ…