தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களான தளபதி விஜய் மற்றும் அஜித்குமார், பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களாக திகழ்கின்றனர். முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் அடுத்து சமீபத்தில் தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் மெகா ஹிட்டானது.

இதனையடுத்து மீண்டும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 படத்தில் நடித்துவரும் அஜித்குமார் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல் தளபதி விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி66 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக மீண்டும் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 50-வது திரைப்படமாக வெளிவந்த மங்காத்தா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து மங்காத்தா 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் தற்போது மங்காத்தா 2 திரைப்படத்தின் ருசிகர தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்துள்ளார்.

சென்னையில் உள்ள சவீதா மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெங்கட்பிரபு மாணவர்கள் முன்னிலையில் மங்காத்தா 2 திரைப்படம் குறித்து பேசியபோது மங்காத்தா 2 திரைப்படம் தளபதி விஜய் மற்றும் அஜித்குமார் இணைந்து நடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டதாகவும் ஆனால் அதற்கு அடுத்த கட்ட நிலைக்கு அப்போது மங்காத்தா-2 நகரவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

கூடிய விரைவில் இதற்கான சூழ்நிலைகள் அமைந்தால் தளபதி விஜய் மற்றும் அஜித்குமார் இணைந்து நடிக்கும் மங்கத்தா 2 திரைப்படம் தயாராகலாம் என தெரிவித்துள்ளார். அஜித் மற்றும் விஜய் இணைந்து நடிக்கும் மங்கத்தா 2 திரைப்படம் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…