விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று அரண்மனை கிளி.வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது.இந்த தொடரில் மோனிஷா,சூர்ய தர்ஷன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.இவர்கள் இருவருக்கும் தனி தனியாக ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.இருவருக்கும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ரசிகர் பக்கங்கள்,போட்டோ வீடியோ எடிட்க்கள் என்று ரசிகர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்தனர்.

பிரகதி,நீலிமா ராணி,காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.200 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிவந்த இந்த தொடரின் ஒளிபரப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.லாக்டவுனுக்கு முன்பே இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக நீலிமா ராணி தெரிவித்திருந்தார்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து சீரியல் ஷூட்டிங்குகள் அனைத்தும் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் அரண்மனை கிளி ஷூட்டிங் தொடங்கவில்லை இதனால் இந்த தொடர் என்ன ஆச்சு என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் பேசிய இந்த தொடரின் நாயகி மோனிஷா,இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக கைவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இதற்கு காரணாம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அனைவரும் கேரளா,பெங்களூர்,ஹைதெராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருப்பதாகவும் அவர்களை ஒருங்கிணைத்து நடத்துவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த தொடரை இயக்கி வந்த சுரேஷும் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை அடுத்து இந்த தொடரின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியிலும்,வருத்தத்தில் உள்ளனர்.