திருவாரூர் மாவட்டத்தில் வளையல் வியாபாரி ஒருவர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகத்து காணப்படுகின்றன.

அதன்படி, நேற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிறுமி எரித்துக்கொலை செய்யப்பட்டார். கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் ஒரு சிறுமி பாதி எரிக்கப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். 

இப்படி, தமிழகத்தில் சமீப காலமாகப் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மாவட்டம் நன்னிலம் பகுதியில் 7 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த சிறுமி மாயமாகி உள்ளார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அந்த பகுதி முழுவதும் சிறுமியைத் தேடி உள்ளனர்.

அப்போது, வடகண்டம் பகுதியைப் பகுதியைச் சேர்ந்த 45 வயதான வளையல் வியாபாரி கதிரேசன், அந்த சிறுமியை ஆசை வார்த்கைள் கூறியும், சில ரூபாய் மதிப்பிலான வளையல்களைப் பரிசாகக் கொடுத்தும், அந்த 7 வயது சிறுமியை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்குச் சென்றதும், சிறுமியை வலியால் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த சிறுமி வலி தாங்காமல் சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர். அப்போது, அந்த வளையல் வியாபாரி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துகொண்டு இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள், அவனைப் பார்த்து சத்தம் போட்டுள்ளனர். இதனால், ஊர் மக்கள் பார்த்துவிட்டதைக் கவனித்த அந்த வளையல் வியாபாரி அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் அந்த பகுதி மக்கள் அந்த வளையல் வியாபாரியை விரட்டிச் சென்று பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பகுதி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், விரைந்த நன்னிலம் போலீசாரிடம் அந்த வளையல் வியாபாரி ஒப்படைக்கப்பட்டார். பிறகு, அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, வளையல் வியாபாரி கதிரேசனிடம் நன்னிலம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, நன்னிலம் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், திருவாரூர் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.