படத்திறக்கு படம் வித்தியாசமான கதைக்களங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் புதிய படம், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக காக்காமுட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

Tribal ஆர்ட்ஸ் புரோடக்சன் தயாரித்துள்ள கடைசி விவசாயி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.கடைசி விவசாயி திரைப்படம் விரைவில் நேரடியாக SonyLIV OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று கடைசி விவசாயி திரைப்படத்தின் Print சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது. எனவே படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.