சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த பட சாரக் காற்றே பாடல் வீடியோ இதோ!
By Anand S | Galatta | November 13, 2021 18:50 PM IST
இந்திய திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகெங்கும் திரையரங்குகளில் வெளிவந்து , குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கொண்டாடிவரும் திரைப்படம் அண்ணாத்த.
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, சூரி உள்ளிட்ட பலர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்தின் ஓப்பனிங் பாடலான அண்ணாத்த அண்ணாத்த வீடியோ பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் சாரக் காற்றே பாடல் வீடியோ வெளியானது. யுகபாரதியின் வரிகளில், சிட் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள அழகான சாரக் காற்றே பாடல் வீடியோ இதோ…