தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக திகழும் நடிகர் தல அஜித் குமார் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக ஜனவரியில் திரைக்கு வருகிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மீண்டும் தல அஜித்துடன் இணைந்து உள்ள இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

வலிமை திரைப்படத்தில் தல அஜித்குமார் உடன் இணைந்து ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.முன்னதாக வெளிவந்த வலிமை GLIMPSE  வீடியோ மற்றும் நாங்க வேற மாதிரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தல அஜித் குமாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இன்று வெளியானது. அதில், “ஏழை, நடுத்தரம் மற்றும் பணக்காரன் என்பது பொருளாதார நிலையை தான் குறிக்குமே தவிர அவர்களின் குணாதிசயங்களை அல்ல. நல்ல மற்றும் கெட்ட மனிதர்கள் சமூகத்தின் அனைத்து வட்டாரங்களிலும் இருக்கிறார்கள். வெறும் ஒருவரின் பொருளாதார நிலையை மட்டுமே வைத்து அவருடைய குணாதிசயங்களை முடிவு செய்வதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைவரும் விழித்துக் கொள்ளுங்கள்” என ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார் தல அஜித் குமார். இதனை வலிமை திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து பணியாற்றியுள்ள நடிகர் ராஜ் ஐயப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித் குமாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இதோ...