போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த கமல்ஹாசன்! ட்ரெண்டாகும் புதிய பிக்பாஸ் 5 ப்ரோமோ!
By Anand S | Galatta | November 13, 2021 16:30 PM IST
மழையில் நனைந்த தீபாவளி பட்டாசு போல் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் கடந்த வாரத்தில் சரவெடியாய் வெடித்தனர். அதன் தொடக்கமாக கேப்டன்சி டாஸ்க்கில் அபிநய் வெற்றிபெற நாணயத்தை பயன்படுத்திய இசைவாணி கேப்டன் பதவியை தட்டிப் பறித்ததோடு எவிக்ஷனில் இருந்தும் தப்பித்தார்.
இதனையடுத்து நடைபெற்ற இந்த வார்த்திற்கான நீயும் பொம்மை நானும் பொம்மை லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் ஒரு போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாட அனல்பறக்கும் விவாதங்களும் வெடித்தது. இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் நிரூப் வெற்றி பெற்றார்.
மேலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5-ல் பிக்பாஸ் விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இதில் போட்டியாளர்களுக்கு விஷ பாட்டில், தொட்டாசினுங்கி, டம்மி பீசு, சிம்ப்ளி வேஸ்ட், செட் ப்ராப்பர்ட்டி, சகுனி என பல பெயர்கள் இடப்பட்ட கிரீடங்கள் வழங்கப்பட்டன இதுகுறித்த காரசார விவாதங்களும் எழுந்தன.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் போட்டியாளர்களுக்கு, “எது எல்லை எது வரம்பு என்பதை இவர்களுக்கு சுட்டிக் காட்டியே ஆகவேண்டும்” என பேசும் புதிய ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. அந்த பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ இதோ…