விஜய் சேதுபதி - 'விடாமுயற்சி' இயக்குனர் மகிழ் திருமணி - மோகன் ராஜா இணைந்த அதிரடி படம்... கவனம் ஈர்க்கும் விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!

விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பட ட்ரெய்லர் வெளியீடு,vijay sethupathi in yaadhum oore yaavarum kelir trailer out now | Galatta

நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது. மக்களின் மனம் கவர்ந்த நாயகராக படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பாக நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டில் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம், இயக்குனர் சீனு ராமசாமியின் மாமனிதன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் DSP மற்றும் 19(1)(a) எனும் மலையாள படம் உட்பட 6 படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. 

தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் சந்திப் கிருஷ்ணன் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மைக்கேல் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை பாகம் 1 திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. பெருமாள் வாத்தியார் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் குறைவான காட்சிகளில் தோன்றினாலும் விடுதலை பாகம் 2 படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் மிகச் சிறப்பாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும் இந்த 2023ம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் அதிரடியான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அதில் முதலாவதாக ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் படமான மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக உருவாகி இருக்கும் மும்பைக்கர் படத்திலும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கி இருக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனிடையே விஜய் சேதுபதியின் நடிப்பில் நீண்டகாலமாக ரிலீஸுக்காக காத்திருக்கு திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளீர். 

விஜய் சேதுபதியுடன் இணைந்து மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க, "விடாமுயற்சி" பட இயக்குனர் மகிழ் திருமேனி & இயக்குனர் மோகன் ராஜா, முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக், ரகு ஆதித்யா, மதுரா, கனிகா, ரித்விகா கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், வித்யா பிரதீப், இமான் இண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ள யாவரும் கேளிர் திரைப்படத்தில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எசக்கி துரை, சினி இன்னோவேஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்திற்கு வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. அந்த ட்ரெய்லர் இதோ…
 

அருள்நிதி - ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளர் கூட்டணியின் அட்டகாசமான புதிய படம்... ரொமான்டிக்கான SPECIAL GLIMPSE இதோ!
சினிமா

அருள்நிதி - ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளர் கூட்டணியின் அட்டகாசமான புதிய படம்... ரொமான்டிக்கான SPECIAL GLIMPSE இதோ!

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் மிரட்டலான ஜிகர்தண்டா DOUBLE X பட அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பு... மரண மாஸ் GLIMPSE இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் மிரட்டலான ஜிகர்தண்டா DOUBLE X பட அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பு... மரண மாஸ் GLIMPSE இதோ!

ராம் போத்தினேனியின் செம்ம மாஸ் பர்த்டே ஸ்பெஷல்: சூப்பர் ஹிட் பட பார்ட் 2 அறிவிப்பு... ரிலீஸ் தேதியும் வெளியீடு!
சினிமா

ராம் போத்தினேனியின் செம்ம மாஸ் பர்த்டே ஸ்பெஷல்: சூப்பர் ஹிட் பட பார்ட் 2 அறிவிப்பு... ரிலீஸ் தேதியும் வெளியீடு!