ராகவா லாரன்ஸ் - SJசூர்யாவின் மிரட்டலான ஜிகர்தண்டா DOUBLE X பட அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்பு... மரண மாஸ் GLIMPSE இதோ!

கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா DOUBLE X பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,raghava lawrence sj suryah in jigarthanda double x release announcement | Galatta

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ.சூர்யா இணைந்த நடித்த மிரட்டலான திரைப்படமாக தயாராகி வரும் ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகான். சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த மகான் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனை அடுத்து தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்தவரும் கேம் சேஞ்சர் திரைப்படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதாசிரியராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் தான் ஜிகர்தண்டா DOUBLE X. கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் இரண்டாவது படமாக வெளிவந்த ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஜிகர்தண்டா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய பாராட்டுகளை பெற்றது. இந்த நிலையில், ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா திரைப்படம் 8 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் ஜிகர்தண்டா 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார். அப்போது இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் தொடங்கிய நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த ஜிகர்தண்டா DOUBLE X அறிவுப்பு டீசர் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. 

ஜிகர்தண்டா படத்தின் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் அவர்கள் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் ஆகியோர் இணைந்து தயாரிக்க அட்டகாசமான கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் ஜிகர்தண்டா DOUBLE X படத்திற்கு ஹே ராம் ஆல வந்தான் 24 பேட்ட மற்றும் கேம் சேஞ்சர் படங்களின் ஒளிப்பதிவாளர் திரு என்கிற திருநாவுக்கரசு அவர்களின் ஒளிப்பதிவில் ஷபிக் முஹம்மத் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க விவேக் பாடல்களை எழுதி இருக்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் பக்கா மாஸான ஒரு புது வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் பலர் அது கவனத்தையும் ஈர்த்திருக்கும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

அன்னையர் தின சர்ப்ரைஸ்: நயன்தாரா தன் குழந்தைகளுடன் இருந்த முதல் தருணம்... இதுவரை வெளிவராத ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ!
சினிமா

அன்னையர் தின சர்ப்ரைஸ்: நயன்தாரா தன் குழந்தைகளுடன் இருந்த முதல் தருணம்... இதுவரை வெளிவராத ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"அவர்" தான் கேம் பிளான் பண்றாருன்னு தோணுது!- சம்யுக்தா பிரிந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த விஷ்ணுகாந்த்! ட்ரெண்டிங் வீடியோ

ஆர்யாவின் பக்கா ஆக்ஷனில் வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... அதிரடியாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு! புதிய மாஸ் GLIMPSE இதோ
சினிமா

ஆர்யாவின் பக்கா ஆக்ஷனில் வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... அதிரடியாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு! புதிய மாஸ் GLIMPSE இதோ