ராம் போத்தினேனியின் செம்ம மாஸ் பர்த்டே ஸ்பெஷல்: சூப்பர் ஹிட் பட பார்ட் 2 அறிவிப்பு... ரிலீஸ் தேதியும் வெளியீடு!

ராம் போத்தினேனியின் டபுள் இஸ்மார்ட் பட முக்கிய அறிவிப்பு,ram pothineni double ismart movie announcement | Galatta

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ராம் போத்தினேனி இன்று (மே 15) தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு கலாட்டா குழுவும் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் தெலுங்கு சினிமா ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராம் போத்தினேனியின் பிறந்தநாள் பரிசாக வந்த அறிவிப்பு தான் டபுள் இஸ்மார்ட். ஏற்கனவே நடிகர் ராம் போத்தினேனி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படத்தின் பார்ட் 2வாக டபுள் ஸ்மார்ட் திரைப்படம் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய தெலுங்கு சினிமாவின் நட்சத்திர இயக்குனர் பூரி ஜகன்நாத் அவர்களே இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அருண் விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக ராம் போதினேனி நடித்த ரெட் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட்டான நிலையில், இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக ராம் போத்யினேனி நடித்த தி வாரியர் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக லெஜன்ட், வினைய விதைய ராமா, அகண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் புதிய அதிரடி திரைப்படத்தில் ராம் போத்தினேனி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டீசர் இன்று மே 15ஆம் தேதி ராம் போத்தினேனியின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 20ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக தளபதி விஜயின் லியோ (அக்டோபர் 19) படத்துடன் திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக தனது இஸ்மார்ட் ஷங்கர் படத்தின் பார்ட் 2வாக டபுள் இஸ்மார்ட் படத்தில் ராம் போத்தினேனி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் கடந்த (2022) ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்து விமர்சன ரீதியாக பெரும் தோல்வியடைந்த லைகர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இந்த டபுள் இஸ்மார்ட் திரைப்படத்தை இயக்குகிறார். தனது பூரி கனெக்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என PAN INDIA படமாக வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.  விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அறிவிப்புகளும் இதர அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி டபுள் இஸ்மார்ட் திரைப்படம் பக்கா ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் டபுள் இஸ்மார்ட் படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

The ENERGETIC combo of
Ustaad @ramsayz & Dashing Director #PuriJagannadh is back with ISMART BANG for #DoubleISMART🔥

A high octane action entertainer in cinemas from MARCH 8th 2024💥

In Telugu, Hindi, Tamil, Malayalam, Kannada#HappyBirthdayRAPO@Charmmeofficial pic.twitter.com/zVq6AX6rH3

— Puri Connects (@PuriConnects) May 14, 2023

சினிமா

"அவர்" தான் கேம் பிளான் பண்றாருன்னு தோணுது!- சம்யுக்தா பிரிந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த விஷ்ணுகாந்த்! ட்ரெண்டிங் வீடியோ

ஆர்யாவின் பக்கா ஆக்ஷனில் வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... அதிரடியாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு! புதிய மாஸ் GLIMPSE இதோ
சினிமா

ஆர்யாவின் பக்கா ஆக்ஷனில் வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... அதிரடியாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு! புதிய மாஸ் GLIMPSE இதோ

சினிமா

"அன்னையர் தினத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் தாயாரை கௌரவித்த தமிழ்நாடு ஆளுநர்!"- விவரம் உள்ளே