அருள்நிதி - ரெட் ஜெயன்ட் மூவிஸ் - டாடா தயாரிப்பாளர் கூட்டணியின் அட்டகாசமான புதிய படம்... ரொமான்டிக்கான SPECIAL GLIMPSE இதோ!

அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் பட அவ கண்ண பாத்தா பாடல் வெளியிடு,arulnithi in kazhuvethi moorkkan movie ava kanna paatha song out now | Galatta

தனது திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முற்றிலும் மாறுபட்ட அதிரடி கதாபாத்திரத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக புதிய பாடல் வெளியானது. தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக வித்தியாசமான பல்வேறு த்ரில்லர் திரைப்படங்களை கொடுத்து வரும் அருள்நிதியின் த்ரில்லர் படங்களின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல யூட்யூபர் எரும சாணி விஜய் இயக்குனராக களமிறங்கிய டி-ப்ளாக், இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த தேஜாவு மற்றும் இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் வெளிவந்த டைரி என அருள்நிதி நடித்த மூன்று திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் சைக்கலாஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக அருள்நிதி நடித்த திருவின் குரல் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியிடாக ரிலீஸாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

அடுத்ததாக தனக்கு திருப்புமுனை படமாக அமைந்த டிமான்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் இணைந்துள்ள நடிகர் அருள்நிதி டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த வரிசையில் அருள்நிதி நடிப்பில் பக்கா கிராமத்துப் பின்னணியை கதைக்களமாக கொண்ட படமாக தயாராகி இருக்கிறது கழுவேத்தி மூர்க்கன். பிக் பாஸ் போட்டியாளரும் நடிகருமான கவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டாடா திரைப்படத்தின் தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தனது ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் மிரட்டலான கதாப்பாத்திரத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, சார்பட்டா பரம்பரை & நட்சத்திரம் நகர்கிறது படங்களின் நாயகி துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், ராஜசிம்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு D.இமான் இசையமைக்க, பாடல்களை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

ஜோதிகாவின் ராட்சசி படத்தை இயக்கிய இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்திற்கு பரியேறும் பெருமாள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்குனர் மகேந்திரா அவர்களின் கலை இயக்கத்தில், நடன இயக்குனர் தீனா நடன இயக்கத்தில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ஸ்டண்ட் இயக்குனராக கணேஷ் பணியாற்றியுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் அருள் நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை அறிவிக்கும் வகையில் அருள் நிதியின் மாஸான புது கெட்டப்பில் ஆரம்பத்தில் வெளிவந்த புகைப்படங்களே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் ரசிகர்களுக்கு விருந்தாக கழுவேத்தி மூர்கன் திரைப்படத்திலிருந்து அவ கண்ண பாத்தா எனும் ரொமான்டிக்கான பாடல் தற்போது வெளியானது. இந்தப் பாடலை பிரபல பாடகர் ஜித்தின் ராஜ் பாடியிருக்கிறார். அட்டகாசமான ரொமான்டிக் பாடலாக வெளிவந்திருக்கும் அவ கண்ண பாத்தா பாடலின் லிரிக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

25 ஆண்டுகளுக்குப் பின் ஜோதிகாவின் பாலிவுட் என்ட்ரி... மாதவன்-அஜய் தேவ்கன் உடன் இணையும் புதிய படம்! ஸ்பெஷல் அப்டேட் இதோ
சினிமா

25 ஆண்டுகளுக்குப் பின் ஜோதிகாவின் பாலிவுட் என்ட்ரி... மாதவன்-அஜய் தேவ்கன் உடன் இணையும் புதிய படம்! ஸ்பெஷல் அப்டேட் இதோ

அன்னையர் தின சர்ப்ரைஸ்: நயன்தாரா தன் குழந்தைகளுடன் இருந்த முதல் தருணம்... இதுவரை வெளிவராத ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ!
சினிமா

அன்னையர் தின சர்ப்ரைஸ்: நயன்தாரா தன் குழந்தைகளுடன் இருந்த முதல் தருணம்... இதுவரை வெளிவராத ஸ்பெஷல் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"அவர்" தான் கேம் பிளான் பண்றாருன்னு தோணுது!- சம்யுக்தா பிரிந்தது பற்றி முதல் முறை மனம் திறந்த விஷ்ணுகாந்த்! ட்ரெண்டிங் வீடியோ