விஜய் ஆண்டனியின் TRADE MARK பாடல்கள் பட்டியலில் புதுவரவு... பிச்சைக்காரன் 2 பட அசத்தலான நாநா புலுக் வீடியோ பாடல் இதோ!

விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட நாநா புலுக் வீடியோ பாடல்,vijay antony in pichaikkaran 2 movie nana buluku video song | Galatta

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் விஜய் ஆண்டனி கொடுத்த ஒவ்வொரு பாடல்களும் ட்ரெண்டிங் ஹிட்டடித்தன. தொடர்ந்து நடிகராகவும் வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி முதல் முறை இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது திடீரென படகு விபத்தில் பலத்த காயமடைந்தார். முகத்தில் மட்டும் பல்வேறு எலும்பு முறிவுகளும் மோசமான காயங்களும் ஏற்பட்ட நிலையில் தீவிர சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது பூரண குணமடைந்து மீண்டு வந்திருக்கிறார். 

முன்னதாக இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக விஜய் ஆண்டனி நடித்துள்ள காக்கி, மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான அக்னி சிறகுகள், இயக்குனர் பாலாஜி K குமார் இயக்கத்தில் க்ரைம் திரில்லர் படமாக தயாராகியுள்ள கொலை, ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன், தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் இயக்கத்தில் அதிரடியான பொலிட்டிக்கல் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள ரத்தம் மற்றும் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் வள்ளி மயில் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து விஜய் ஆண்டனி அவர்களின் நடிப்பில் வரிசையாக வெளிவர உள்ளன. 

இந்த வரிசையில் இயக்குனர் சசி இயக்கத்தில் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி அவர்களின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில், காவியா தப்பர் கதாநாயகியாக நடிக்க, ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள  பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கு படத்தொகுப்பு செய்து இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. 

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக பிச்சைக்காரன் 2 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் கதை களமும் வசனங்களும் தங்களது ஆய்வுக்கூடம் படத்தில் இருப்பது போலவே இருப்பதாக அந்த பட குழுவினர் வழக்கு தொடர்ந்த நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது. இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கியதை தொடர்ந்து அடுத்த வாரம் வருகிற மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் TRADE MARK பாடல்களின் பட்டியலில் புதுவரவாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து நாநா புலுக் எனும் பாடல் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. நாநா புலுக் என்பது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு கடவுள் என்பதையும் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார். வைரலாகும் பிச்சைக்காரன் 2 பட நாநா புலுக் வீடியோ பாடல் இதோ…
 

சினிமா

"இது SPOILER கிடையாது!"- பிச்சைக்காரன் 2 ட்ரெய்லரின் பின்னணியில் உள்ள ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி! ஸ்பெஷல் வீடியோ இதோ

லைகா உடன் இணைந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய முக்கோண காதல் படம்... கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!
சினிமா

லைகா உடன் இணைந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய முக்கோண காதல் படம்... கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கௌரவிக்கும் தளபதி விஜய்… குவியும் பாராட்டுகள்! விவரம் இதோ
சினிமா

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கௌரவிக்கும் தளபதி விஜய்… குவியும் பாராட்டுகள்! விவரம் இதோ