திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

பொன்னியின் செல்வன் 2 உருவான விதம் அட்டகாசமான வீடியோ இதோ - Ponniyin selvan 2 making video out now | Galatta

இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் அவர்களின் பிரம்மாண்ட படைப்பாக கடந்த ஏப்ரல் 28 ம் தேதி வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. லைகா தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, அதே போல் இந்த ஆண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகெங்கும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தலை சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டு முயற்சியாக உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இதுவரை உலகெங்கும் ரூ 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகின்றது. 13 நாட்கள் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் இன்னும் கூட்டம் குறையாமல் மக்கள் தங்கள் ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.  

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லஷ்மி, சரத்குமார், பிரபு, ரகுமான், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருப்பார். மேலும் இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரம்மாண்டத்தில் உச்சமாய் இருந்த தமிழ் இலக்கிய காவியமான கல்கியின் பொன்னியின் செல்வன் தழுவி உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரூ 500 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.  

இந்த ஆண்டு தமிழ் திரையுலகில் வெளியான மிகப்பெரிய வசூல் ஈட்டிய படமாக பொன்னியின் செல்வன் 2 அமைந்துள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வரும் இந்த தருணத்தில் பொன்னியின் செல்வன் உருவான விதம் தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான காட்சிகள் உருவான தருணங்களை காட்சிகளாக தொகுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. பிளாக் பஸ்டர் கொண்டாட்டத்துடன் கூடுதல் கொண்டாட்டமாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

“இதனால் தான் அந்த ட்வீட் போட்டேன்” உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“இதனால் தான் அந்த ட்வீட் போட்டேன்” உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

ரசிகர்களுக்கு வேற லெவல் Birthday treat கொடுத்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ரசிகர்களுக்கு வேற லெவல் Birthday treat கொடுத்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..

“ஃபர்ஹானா படத்தில் ஏன் மெட்ரோ?” அட்டகாசமான வீடியோவுடன் இயக்குனர் கொடுத்த விளக்கம்.. – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஃபர்ஹானா படத்தில் ஏன் மெட்ரோ?” அட்டகாசமான வீடியோவுடன் இயக்குனர் கொடுத்த விளக்கம்.. – வைரலாகும் வீடியோ இதோ..