"இது SPOILER கிடையாது!"- பிச்சைக்காரன் 2 ட்ரெய்லரின் பின்னணியில் உள்ள ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி! ஸ்பெஷல் வீடியோ இதோ

பிச்சைக்காரன் 2 ட்ரெய்லரின் பின்னணியின் ரகசியங்களை உடைத்த விஜய் ஆண்டனி,vijay antony about spoilers of pichaikkaran 2 movie trailer | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற மே 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.  தயாரிப்பு, படத்தொகுப்பு, இசை ஆகியவற்றோடு சேர்த்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் பேசிய விஜய் ஆண்டனி அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், "பிச்சைக்காரன் 2 படத்தின் ட்ரெய்லர் குறித்து ஒரு கேள்வி! நீங்கள் ஒரு பணக்காரனை அறிமுகப்படுத்துகிறீர்கள் நடுவிலேயே அவன் இறந்து விடுகிறான் என்று சொல்கிறீர்கள் இது ஒரு SPOILER இல்லையா? கடந்த 5-6 ஆண்டுகளாக இது மாதிரி ட்ரெய்லரில் நிறைய கதை சொல்லி விடலாம்… ஏனென்றால் மக்கள் தயாராகி வருவார்கள் என்பது போல... இதன் பின்னால் இருக்கும் லாஜிக் என்ன?” எனக் கேட்ட போது,

“பிச்சைக்காரன் 1 படத்தில் பார்த்தீர்கள் என்றால் அம்மா எமோஷன் கொஞ்சம் நிறைய இருந்தது. அம்மாவிற்காக ஒரு பையன் போய் பிச்சை எடுக்கிறான் என்பது போல, மக்கள் அதே மாதிரி ஒரு எமோஷனை எதிர்பார்த்து வந்தார்கள் என்றால் ஏமாந்து விடுவார்கள். வழக்கமாக SNEAK PEEK என்பதை படத்தின் ரிலீஸ்க்கு ஒரு வாரம் முன்பு வெளியிடுவார்கள். அப்படி வேண்டாம் நாம் முன்னாடியே ரிலீஸ் செய்துவிடுவோம், இந்த மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றிய வேறு மாதிரியான படம் என்பதை மக்களுக்கு தெரிவித்து விடுவோம் என்று தான் அதை முதலில் ரிலீஸ் செய்தேன். அப்போதுதான் மக்கள் இது வேறு மாதிரி படம் என டியூன் ஆக ஆரம்பித்தார்கள். அதன் பிறகு ட்ரெய்லரை கட் செய்யும் போது, சில நேரங்களில் நான் என்ன லாஜிக்கில் இதை செய்கிறேன் என்பது எனக்கு தெரியாது பாடல் கம்போஸ் செய்வதாக இருந்தாலும் கூட ஏன் செய்கிறேன் எதனால் செய்கிறேன் என்பது தெரியாது. அது தெரியாத ஒரு நிலைக்கு போய் வருவேன். அப்படிதான் ட்ரெய்லரை கட் செய்தேன். உங்களுக்கு புரிய கூடாது என்கிற லெவலில் தான் அதை கட் செய்து இருக்கிறேன். அதனுடைய கதை வேறு. அந்த கதையில் இருக்கும் எந்த விஷயமும் உங்களுக்கு புரிந்திருக்காது என்ன அதிகம் புரிந்து இருக்கும் என்றால், இந்தியாவுடைய ஏழாவது பெரிய பணக்காரன் அதை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அது படத்தில் குறைவான இடத்தில் தான் வருகிறது. மூன்று இடங்களில் தான் சொல்கிறோம். அதை டிரைலரில் சொல்லும்போது அந்த மூடில் வருவார்கள். அதேபோல் ஒரு தங்கச்சி சென்டிமென்ட் வருகிறதல்லவா? அதை லிரிக்கல் வீடியோ கூட வெளியிட வில்லை ஒரிஜினல் வீடியோ பாடலை வெளியிட்டேன். ஏனென்றால் அந்த பசங்க குறைவான நேரம் தான் படத்தில் வருகிறார்கள். அது படம் இல்லை. ஆனால் அவர்கள் படம் முழுக்க மக்களுடைய மனதில் சஞ்சாரிக்க வேண்டும். அதற்காக அதையும் முன்பே ரிலீஸ் செய்கிறேன். நான் கதை எழுதும் போதிலிருந்தே அந்த கதாபாத்திரங்கள் மனதில் நிறைய ஓடி இருக்கும். நான் அதிலேயே இருந்திருப்பேன் என்பதால் அது எனக்கு சாதாரணமாக தெரியும். ஆனால் மக்கள் வந்தவுடன் ஒரு இரண்டரை மணி நேரம் பார்க்கிறார்கள், அதில் இவர்கள் குறைவான நேரமே வருகிறார்கள். ஆனால் அந்த கதாபாத்திரங்கள் மனதில் நிற்க வேண்டும். அப்படி நின்றால் படம் இன்னும் பெரியதாக போய் சேரும் என்பதற்காக எதெல்லாம் படத்தில் குறைவாக இருக்கிறதோ? அதை எல்லாம் சேர்த்து விட்டது தான் இந்த பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர். அதனால் இது SPOILER கிடையாது." என பதில் அளித்துள்ளார். விஜய் ஆண்டனியின் அந்த முழு பேட்டி இதோ…
 

தனுஷின் பக்கா ஆக்சனில் கில்லர் கில்லர்
சினிமா

தனுஷின் பக்கா ஆக்சனில் கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்!”- மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் & டீசர் குறித்த அட்டகாசமான அறிவிப்பு… செம்ம மாஸ் GLIMPSE இதோ!

“ICUல் முதல் முறை கண் திறந்து பார்த்த போது…”- பிச்சைக்காரன் 2 விபத்து குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ
சினிமா

“ICUல் முதல் முறை கண் திறந்து பார்த்த போது…”- பிச்சைக்காரன் 2 விபத்து குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ

இயக்குனர் சுந்தர்C-யின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2 தயார்... ரிலீஸ் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

இயக்குனர் சுந்தர்C-யின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2 தயார்... ரிலீஸ் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!