"லியோ, LCUல் இருக்கீங்களா?"- உண்மையை உடைத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பதில்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

லியோ LCU குறித்து விஜய் சேதுபதி பதில் அளித்துள்ளார்,vijay sethupathi opens about leo and lcu | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிப்பது குறித்தும், LCU குறித்தும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார். தற்போதைய இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைகள் படைத்தது. மேலும் கைதி மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களை கொண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU என்ற யுனிவர்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த LCUவில், தற்போது இயக்குனர் லோகேஷ் கானகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படமும் இடம்பெறுமா என்றும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகும் லியோ படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் - திரிஷா கூட்டணி லியோ படத்தில் மீண்டும் இணைந்திருக்கிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோரோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். 

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான வில்லனாக ரசிகர்களை கவர்ந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லியோ படத்திலும் நடிக்கிறார் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. குறிப்பாக லியோ படத்தின் திரைக்கதை வசனங்களில் பணியாற்றி இருக்கும் இயக்குனர் ரத்னகுமார் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு தளத்தில் சன் கிளாஸின் உடைந்த பாகத்தை காட்டியபடி வெளியிட்ட புகைப்படம், விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் சந்தனம் கதாபாத்திரத்தின் உடைந்த கண்ணாடியை குறிக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே லியோ திரைப்படம் LCUவில் இடம் பெறும் என்றும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது போன்றும் பலவிதமான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி அவர்களிடம், “லியோ, LCUவில் இருக்கிறீர்களா?” என கேட்டபோது, “இல்லை.. இல்லை! நல்லவேளை கேட்டீர்கள்.. நிறைய பேர் என்னையும் கேட்கிறார்கள் அப்படி ஒரு சம்பவமும் கிடையாது. அது எதையும் நம்பாதீர்கள்.” என பதிலளித்துள்ளார். 

தொடர்ந்து அவரிடம், “ட்விட்டரில் உங்களுடைய கண்ணாடியை மட்டும் பார்த்தோம்” என கேட்டபோது, “இல்லை ரத்னா அதை ஏன் செய்தார் என தெரியவில்லை. அவரை தான் கேட்க வேண்டும், அவர் ஜாலியாக செய்திருப்பார். கற்பனை செய்து யாராவது போட்டு இருப்பார்கள். எங்களுக்கு என்ன என்றால் ஒன்றுமே இல்லாததற்கெல்லாம் ஏதேதோ யோசித்து போடுவார்கள் அதை அனைத்திற்கும் பதில் சொல்ல முடியாது. சில பெரிய பெரிய செய்தி சேனல்கள் எல்லாம் கேட்கிறார்கள், எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது யூட்யூபில் போட்டார்கள் என்றால் பரவாயில்லை பெரிய செய்தி சேனல்கள் எளிதாக எங்களை தொடர்பு கொள்ள முடியும். அப்படி இருந்தும் அவர்களிடமிருந்தும் இப்படி செய்திகள் வரும் போது மக்கள் அதை நம்பி விடுகிறார்கள். ஆனால் உண்மையி அப்படி எதுவும் கிடையவே கிடையாது.” என திட்டவட்டமாக விஜய் சேதுபதி தெரிவித்திருக்கிறார்.
 

லைகா உடன் இணைந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய முக்கோண காதல் படம்... கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!
சினிமா

லைகா உடன் இணைந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய முக்கோண காதல் படம்... கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கௌரவிக்கும் தளபதி விஜய்… குவியும் பாராட்டுகள்! விவரம் இதோ
சினிமா

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து கௌரவிக்கும் தளபதி விஜய்… குவியும் பாராட்டுகள்! விவரம் இதோ

தனுஷின் பக்கா ஆக்சனில் கில்லர் கில்லர்
சினிமா

தனுஷின் பக்கா ஆக்சனில் கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்!”- மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் & டீசர் குறித்த அட்டகாசமான அறிவிப்பு… செம்ம மாஸ் GLIMPSE இதோ!