லைகா உடன் இணைந்த ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய முக்கோண காதல் படம்... கவனத்தை ஈர்க்கும் ட்ரெய்லர் இதோ!

ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் ஷிவடா இணைந்த தீராக் காதல் பட ட்ரெய்லர்,Jai aishwarya rajesh in theera kaadhal movie trailer out now | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் தீராக் காதல் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தொடர்ந்து தரமான திரைப்படங்களை வழங்கி வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பான  பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாராகி இருக்கும் மிஷன் சாப்டர் 1 திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படைப்புகள் தயாராகி வருகின்றன.

அந்த வகையில், முன்னதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா தயாரித்து வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக வெளிவர இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் தீபாவளி வெளியீடாக ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகும் லால் சலாம் படத்தையும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கவுரவ வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அஜித்குமாரின் 62-வது திரைப்படமான விடாமுயற்சி திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவடா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள முக்கோண காதல் கதையாக தயாராகி உள்ள திரைப்படம் தான் தீராக் காதல். கடைசியாக கடந்த ஆண்டு(2022) வெளிவந்த காபி வித் காதல் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜெய் நடிப்பில் தயாரான பிரேக்கிங் நியூஸ் திரைப்படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. அதேபோல் இந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி என வரிசையாக தனது படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் வரும் மே 12ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து துருவ நட்சத்திரம், மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க ஆகிய தமிழ் படங்களும், அஜயன்டே ரண்டாம் மோஷணம், புலிமடா, ஹேர் ஆகிய மலையாள படங்களும் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

தீராக் காதல் திரைப்படத்தை அதே கண்கள் மற்றும் பெட்ரோல் மேக்ஸ் படங்களின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவில், பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்துள்ள தீராக் காதல் படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். வருகிற மே 26 ஆம் தேதி தீராக் காதல் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தீராக் காதல் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ட்ரெய்லர் இதோ…
 

“ICUல் முதல் முறை கண் திறந்து பார்த்த போது…”- பிச்சைக்காரன் 2 விபத்து குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ
சினிமா

“ICUல் முதல் முறை கண் திறந்து பார்த்த போது…”- பிச்சைக்காரன் 2 விபத்து குறித்து மனம் திறந்த விஜய் ஆண்டனி! வைரல் வீடியோ

இயக்குனர் சுந்தர்C-யின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2 தயார்... ரிலீஸ் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

இயக்குனர் சுந்தர்C-யின் சூப்பர் ஹிட் பட பார்ட் 2 தயார்... ரிலீஸ் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

கமல்ஹாசனின் இந்தியன் 2 - ராம்சரணின் கேம் சேஞ்சர் என பம்பரமாய் சுழலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்! மிரட்டலான ஷூட்டிங் அப்டேட் இதோ
சினிமா

கமல்ஹாசனின் இந்தியன் 2 - ராம்சரணின் கேம் சேஞ்சர் என பம்பரமாய் சுழலும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்! மிரட்டலான ஷூட்டிங் அப்டேட் இதோ