ட்ரெண்டாகும் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் புதிய திருமண புகைப்படங்கள்!
By Anand S | Galatta | July 10, 2022 15:45 PM IST
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகியாக திகழும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள O2 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக தமிழில் ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகும் கனெக்ட் திரைப்படத்தில் நடிக்கிறார்.
முன்னதாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக அறிமுகமாகும் நயன்தாரா, தொடர்ந்து லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் திரைப்படத்திலும் நடிக்கிறார்.
அதேப்போல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் குமார் கதாநாயகனாக நடிக்கும் #AK62 படத்தை இயக்கவுள்ளார். முன்னதாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னணி திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட நட்சத்திரங்களோடு இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஷாருக்கான், S.J.சூர்யா, இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ட்ரெண்டாகும் அந்த புகைப்படங்கள் இதோ…