அக்டோபர் ரேசில் களமிறங்கும் விஜய் ஆண்டனியின் ரத்தம்... அதிரடியாக வந்த புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

விஜய் ஆண்டனியின் ரத்தம் பட புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு,vijay antony cs amudhan raththam movie new release date announcement | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் தனக்கென தனி ஸ்டைலில் சூப்பர் ஹிட் இசையமைப்பாளராக அட்டகாசமான பல பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்த விஜய் ஆண்டனி அவர்கள் தொடர்ந்து நடிகராகவும் அசத்தி வருகிறார். பல்வேறு விதமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த க்ரைம் திரில்லர் படமான கொலை திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான கதை களங்களில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் அக்னி சிறகுகள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர்.

முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் ஆண்டனி முதல் முறை ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் ரோமியோ எனும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான பொலிட்டிக்கல் திரில்லர் படமாக அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் திரைப்படம் தான் ரத்தம். தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து மஹிமா நம்பியார் நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த ரத்தம் திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்குனராகப் பணியாற்றி இருக்கும் ரத்தம் திரைப்படத்தில் திலிப் சுப்ராயன் அவர்கள் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்தம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஓரிரு தினங்களில் வெளிவந்த ரத்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. ஆனால் ட்ரெய்லரில் படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டிருப்பதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி வருகிற அக்டோபர் 6ம் தேதி விஜய் ஆண்டனியின் ரத்தம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் ஆண்டனியின் அக்னி சிறகுகள் படத்தையும் அக்டோபரில் வெளியிட முடிவு செய்திருக்கும் நிலையில், இதே அக்டோபர் ரேசில் விஜய் ஆண்டனியின் மற்றொரு படமாக ரத்தம் படமும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

IF YOU THINK YOU KNOW WHAT'S HAPPENING, THE THEATER EXPERIENCE WILL SHOCK YOU. #RaththamTrailer is trending on #YouTube ▶️

🔗: https://t.co/NvY7PbG1sH#Raththam #ரத்தம் #RaththamFromOct6

From @csamudhan @vijayantony @fvinfiniti @mahima_Nambiar @nanditasweta pic.twitter.com/bJrqSG9S3y

— Infiniti Film Ventures (@FvInfiniti) September 12, 2023