'4 நாள்ல 4 CENTURY!'- பாக்ஸ் ஆபீஸ் கிங் ஷாரூக் கானின் வசூல் வேட்டை... அட்லீயின் ஜவான் பட கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ!

ஷாரூக் கானின் ஜவான் படம் 4 நாட்களில் 520 கோடி வசூலித்துள்ளது,shah rukh khan in jawan movie crossed 520 crores | Galatta

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் - நயன்தாரா இணைந்து நடித்துள்ள ஜவான் திரைப்படம் வெறும் 4 நாட்களிலேயே 520 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படங்களில் ஒன்று ஜவான். கடைசியாக தனது நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பதான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டாக தற்போது ஜவான் படம் வெளிவந்துள்ளது. ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தளபதி விஜய் உடன் கைகோர்த்து தெறி மெர்சல் பிகில் HAT-TRICK பிளாக்பஸ்டர்  ஹிட் கொடுத்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லி ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஷாரூக் கான் கதாநாயகனாக நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக நயன்தாரா களமிறங்கி இருக்கிறார். மிரட்டலான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க, பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஜவான் படத்தில் தளபதி விஜய் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக எதிர்பாக்கப்பட்டது. ஆனால்  தளபதி விஜய் படத்தில் இல்லாததால்  பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். GK.விஷ்ணு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய, ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என PAN INDIA படமாக கடந்த செப்டம்பர் 7ம் தேதி ஜவான் படம் ரிலீஸாகியுள்ளது. 

இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் தற்போது வெளிவந்திருக்கிறது. ஜவான் திரைப்படம் வெறும் 4 நாட்களிலேயே 500 கோடி ரூபாய் என்ற இமாலய இலக்கை தாண்டி இருக்கிறது. முதல் நாளிலேயே 129 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த ஜவான் திரைப்படம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு நாட்களிலும் 100 கோடிக்கும் மேல் வசதி உள்ளது. அதாவது முதல் நாளில் 129.60 கோடி ரூபாய் வசூலித்த ஜவான் படம் இரண்டாவது நாளில் 110.87 கோடி ரூபாய் வசூலித்தது. இதனை அடுத்து மூன்றாவது நாளில் 144. 22 கோடி வசூலித்த ஜவான் படம் நான்காவது நாளில் 136.10 கோடி ரூபாய் வசூலித்து மொத்தமாக 520 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. 

முதல் வார இறுதியான நான்கு நாட்களில் மட்டுமே 520. 79 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை இந்திய சினிமாவில் எந்த படமும் படைப்பில்லாத பெரிய சாதனையை ஜப்பான் படம் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே வேகத்தில் தொடர்ந்து ரசிகர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஜவான் திரைப்படத்தை கொண்டாடும் பட்சத்தில் ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை மிக எளிதில் எட்டுவதோடு இந்திய சினிமாவின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஜவான் படம் பதிவு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரம் குறித்து படக்குழு வெளியீட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

Your love for Jawan has clearly made history in Indian Cinema! 🔥

Have you watched it yet? Go book your tickets now!https://t.co/B5xelUahHO

Watch #Jawan in cinemas - in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/bhPcRF3AxF

— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 11, 2023