அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 தி ரூல் பட ரிலீஸ் எப்போது?- ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

அல்லு அர்ஜுனின் புஷ்பா-2 தி ரூல் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,allu arjun in pushpa 2 the rule movie release date announcement | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் புஷ்பா - 2 தி ரூல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தெலுங்கு திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் அல்லு அர்ஜுனனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்த புஷ்பா - தி ரைஸ் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெளியான அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூல் வேட்டையாடியது.  பக்கா கமர்சியல் ஆக்சன் என்டர்டெய்னர் படமாக ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் மகிழ்விட்ட இந்த புஷ்பா - தி ரைஸ் திரைப்படத்தில் நடிகை சமந்தா நடனமாடிய “ஊ.. சொல்றியா மாமா..” பாடலும் பயங்கர ஹிட் ஆனது 

இதனையடுத்து புஷ்பா - 2 தி ரூல் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. அதிரடியான புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான SP பன்வார் சிங் செகாவத் கதாபாத்திரத்தில் நடிகர் ஃபாதர் பாசில் நடிக்கிறார். முதல் பாகத்தின் முடிவில் புஷ்பா - SP பன்வார் கதாபாத்திரங்கள் இடையே தொடங்கும் மோதல் தீப்பொறியாக கிளம்பிய நிலையில் இரண்டாவது பாகத்தில் எரிமலையாய் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஜெகதீஷ் பிரதாப் பந்தாரி, சுனில் வர்மா, அணுசயா பரத்வாஜ், ராவ் ரமேஷ், தனஞ்ஜெயா, அஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இயக்குனர் சுகுமார் இயக்கும் புஷ்பா-2 தி ரூல் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பில் உருவாகும் புஷ்பா-2 தி ரூல் படத்திற்கு மிரோஸ்லா கூபா ப்ரோஸிக் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திகா ஸ்ரீனிவாஸ் மற்றும் ரூபன் இணைந்து படத்தொகுப்பு செய்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 

இதனிடையே புஷ்பா-2 தி ரூல் திரைப்படத்தின் முக்கிய படப்பிடிப்பு 2022 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வாரம் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் தொடர்ந்து மூன்று வாரங்கள் நடைபெற்றன. மேலும் புஷ்பா-2 தி ரூல் படத்தின் அனைத்து பணிகளும் மிக சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக எந்த அவசரமும் இன்றி மிகுந்த சிரத்தையோடு அதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டு இயக்குனர் சுகுமார் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக  வருகிற 2024 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் புஷ்பா-2 தி ரூல் திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் கிடைத்தன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. புஷ்பா-2 தி ரூல் திரைப்படத்தின் முதல் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புஷ்பா-2 தி ரூல் திரைப்படம் அடுத்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி சுதந்திர தின வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…

 

Mark the Date ❤️‍🔥❤️‍🔥

15th AUG 2024 - #Pushpa2TheRule Grand Release Worldwide 🔥🔥

PUSHPA RAJ IS COMING BACK TO CONQUER THE BOX OFFICE 💥💥

Icon Star @alluarjun @iamRashmika @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @MythriOfficial @SukumarWritings @TSeries pic.twitter.com/xQZwvdqC8F

— Pushpa (@PushpaMovie) September 11, 2023