'பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து!'- உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் துக்கம் விசாரித்த சூர்யா! வீடியோ உள்ளே

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபத்தில் 2 ரசிகர்கள் உயிரிழப்பு,suriya video call to familes of 2 fans who died by current shock | Galatta

நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கப்பட்டு உயிருள்ள இரண்டு ரசிகர்களின் குடும்பத்தாருக்கு நடிகர் சூர்யா வீடியோ கால் மூலம் துக்கம் விசாரித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் விளங்கும் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் முன்னதாக தற்போது “சிறுத்தை” இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவின் திரைப் பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிப்பில் UV கிரியேஷன்ஸ் நிறுவனம் வழங்குகிற பிரம்மாண்ட படைப்பாக மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி வருகிற திரைப்படம் தான் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை திஷா பதாணி கதாநாயகியாக நடிக்கிறார். மிலன் கலை இயக்கத்தில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்யும் கங்குவா திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் கங்குவா திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். 

அட்டகாசமான போர் காட்சிகள் கொண்ட மிரள வைக்கும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக ரசிகர்களுக்கு விருந்தாக 3D தொழில்நுட்பத்தில் பத்து மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிகபட்சமாக கங்குவா திரைப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான உரிமம் மட்டும் 80 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வீடியோவில் வியாபாரம் நடந்துள்ளதாக சமீபத்தில் தயாரிப்பாளர் K.ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோவை நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் பரிசாக நேற்று ஜூலை 23ம் தேதி சரியாக 12.01 மணிக்கு வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் பிறந்த நாளுக்கு அடுத்த சர்ப்ரைஸாக கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

ஓருபுறம் கங்குவா திரைப்படத்தின் சர்ப்ரைஸ் மறுபுறம் ரசிகர்களின் நற்பணி என கோலாகலமாக நடைபெற்ற சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி மிகவும் சோகமாக முடிந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை கொண்டாட வேண்டி பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் நக்கா வெங்கடேஷ் மற்றும் போளூர் சாய் என்ற இரண்டு மாணவர்களும் பேனர் கட்டிக் கொண்டிருந்தபோது மின்சார கம்பிகளின் மீது பேனரின் இரும்பு ஃபிரேம் உரசியதில் இருவரும் மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்திருக்கின்றனர். இந்த நிலையில் தனது பிறந்த நாளில் ஏற்பட்ட இந்த சோகம் குறித்து மனம் உடைந்த நடிகர் சூர்யா உயிரிழந்த இரண்டு ரசிகர்களின் குடும்பத்தாரை வீடியோ கால் மூலம் சந்தித்து தூக்கம் விசாரித்து ஆறுதலாக பேசியிருக்கிறார். அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

சினிமா

"எனது உயிர்கள்" - செல்ல மகன்களை கொஞ்சம் நயன்தாரா... விக்னேஷ் சிவன் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!

சிவகார்த்திகேயனின் ப்ளாக்பஸ்டர் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... அதிரடியான After-Release டீசர் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் ப்ளாக்பஸ்டர் மாவீரன் பட ஸ்பெஷல் ட்ரீட்... அதிரடியான After-Release டீசர் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 'Vishual Treat' உறுதி... இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் 'Vishual Treat' உறுதி... இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த மாஸ் அப்டேட் இதோ!