'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட அதிரடியான டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் பட அதிரடியான டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு,Dhanush in captain miller movie teaser release date announcement | Galatta

சமீப காலமாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தால் நடிகர் தனுஷின் அதிரடி ஆக்சன் திரைப்படமான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் தடம் பதித்து தற்போது உலக சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அந்த வகையில் கடைசியாக தனுஷ் நடிப்பில் தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் வெளிவந்த வாத்தி படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி 100 கோடி ரூபாய் வசூலித்தது. வாத்தி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பிரம்மாண்டப் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். தொடர்ந்து ராஞ்ஜனா (அம்பிகாபதி) படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் மூன்றாவது முறையாக தேரே இஷ்க் மெயின் எனும் புதிய ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ஒரு தெலுங்கு இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க இருக்கும் தனுஷ், விடுதலை பாகம் 2 மற்றும் வாடிவாசல் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் உடன் வடசென்னை 2 படத்திலும் இணைகிறார்.  

இதனிடையே தற்போது தனது D50 படத்தை தனுஷ் கையில் எடுத்திருக்கிறார். தனது திரை பயணத்தில் 50வது திரைப்படமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த ஆண்டு இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் முக்கிய படங்களில் ஒன்றாக விளங்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1930-களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. அதே போல் இந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகலாம் என  எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வரும் ஜூலை 28ஆம் தேதி கேப்டன் மில்லர் டீசர் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு இதோ...
 

Get ready to experience the never before of @dhanushkraja 🥁 #CaptainMiller Teaser on 28th JULY 2023 🔥🤗@ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/l7iCR1NT6N

— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 24, 2023

'பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து!'- உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் துக்கம் விசாரித்த சூர்யா! வீடியோ உள்ளே
சினிமா

'பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து!'- உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் துக்கம் விசாரித்த சூர்யா! வீடியோ உள்ளே

'மரண பயத்தால் தூக்கம் இல்லாத இரவுகள்!'- ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட முதல் விமர்சனம் கொடுத்த ஆஸ்கார் வின்னர்! விவரம் உள்ளே
சினிமா

'மரண பயத்தால் தூக்கம் இல்லாத இரவுகள்!'- ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட முதல் விமர்சனம் கொடுத்த ஆஸ்கார் வின்னர்! விவரம் உள்ளே

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் சில காட்சிகள் நீக்கம்.. காரணம் என்ன?- முன்னணி விநியோகஸ்தரின் விளக்கம் இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் சில காட்சிகள் நீக்கம்.. காரணம் என்ன?- முன்னணி விநியோகஸ்தரின் விளக்கம் இதோ!