தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல வெரைட்டியில் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தற்போது நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

முன்னதாக மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னிச்சிறகுகள் , இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் மற்றும் இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. அடுத்ததாக பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிப்பதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படமாக வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது கோடியில் ஒருவன். இத்திரைப்படத்தை இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்.  செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரிக்க இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் கோடியில் ஒருவன் திரைப்படத்தை வழங்குகிறது.

இசையமைப்பாளர் நிவாஸ்.K.பிரசன்னா இசையில் N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ள கோடியில் ஒருவன் படத்திலிருந்து Sneak Peek வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அந்த Sneak Peek வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.